bio-fertilizer

Fertilisers and Nutrients

Amirtha Karaisal

அமிர்த கரைசல் அல்லது கழிவு சிதைப்பான் அல்லது வேஸ்ட் டிகம்போசர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இது, கழிவுகளை சிதைத்து உரமாக்குவது, மண் வளத்தைப் பெருக்குவது, பயிர் விளைச்சலை அதிகரிப்பது, விளைபொருட்களின் தரத்தை உயர்த்துவது என பல தரப்பட்ட பயன்களை தருகிறது.கழிவு சிதைப்பான் 200 கிராம் கொண்ட பாட்டிலின் விலை அதிகபட்சம் ரூ.40 மட்டுமே.

கழிவு சிதைப்பான் கரைசல் உற்பத்தி!

டிரம் ஒன்றில் 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வெல்லம் கலந்து, அதனுடன் ஒரு பாட்டில் கழிவு சிதைப்பானை (200 கிராம்) கலக்க வேண்டும்.

பின்னர் அந்த டிரம்மை மூடி வைக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இருமுறை கரைசலை நன்கு கலக்கிவிட வேண்டும். இதுபோல் தொடர்ந்து 7 நாட்களுக்கு செய்து வந்தால், நமக்கு கழிவு சிதைப்பான் கரைசல் கிடைத்துவிடும்.

பயன்படுத்தும் வழிமுறை!

மக்கச் செய்ய வேண்டிய பண்ணைக் கழிவுகளான வைக்கோல், மக்காச் சோளத்தட்டை, பருத்தி மிளார், தென்னை மட்டை போன்றவற்றை தரையில் ஒரு மெட்ரிக் டன் அளவுக்கு பரப்பி வைக்க வேண்டும். அதன்மேல், கழிவு சிதைப்பான் கரைசலை 60 சதவீத ஈரப்பதம் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்துவர வேண்டும்.

கழிவுகளின் திடத்தன்மையைப் பொறுத்து, அவை சிதைந்து உரமாவதற்கு ஒரு வாரம், 15 நாள் என தேவையான அவகாசம் எடுத்துக் கொள்ளும். இதுபோன்ற செய்முறையால் பண்ணைக் கழிவுகள் சிதைந்து, உரமாகிவிடும். அனைத்துப் பயிர்களிலும் கழிவு சிதைப்பான் கரைசலை 50 சதவீதம் அளவுக்கு, 7 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். காய்கறி பயிர்களில் கரைசலை 40 சதவீதம் அளவுக்கு 3 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். இதேபோல, பழப் பயிர்களில் கழிவு சிதைப்பான் கரைசலை 60 சதவீதம் அளவுக்கு 7 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். இதனால், பயிர்களில் மகசூல் அதிகரிப்பதுடன், விளை பொருட்களின் தரமும் அதிகரிக்கும். ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இதை கலந்து தெளிக்கக் கூடாது.

பயிர்களின் அனைத்து பருவத்திலும் கழிவு சிதைப்பான் கரைசலை தெளிக்கலாம். இதைதண்ணீரில் கலந்து வயலுக்குப் பாய்ச்சும்போது, மண்ணின் வளமும் மேம்படுகிறது.

கழிவு சிதைப்பான் கரைசலை விதையுடன் கலந்து 30 நிமிடங்கள் உலரவைத்து விதைக்கலாம். இதனால், விதைகளில் முளைப்புத் திறன் அதிகரிக்கும்” என்றார். கழிவு சிதைப்பான் எனப்படும் அமிர்த கரைசல், இயற்கை விவசாயத்துக்கு திரும்ப நினைக்கும் விவசாயிகளுக்கு முதல்படியாக இருக்கும் என்றே கூறலாம்.

இயற்கை முறையிலான அமிர்த கரைசல்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடர்களும் இயற்கை முறையிலான அமிர்த கரைசலைத் தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “பொதுவாக, அமிர்த கரைசலை நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள். அமிர்த கரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.

இதை தயாரிக்க பச்சை பசுஞ்சாணம் -10 கிலோ / பசு மாடு ஒருமுறை போட்ட சாணம் பசுவின் மூத்திரம் -10 லிட்டர் / பசு மாடு ஒருமுறை பெய்த மூத்திரம் நாட்டு சர்க்கரை -250 கிராம் / ஓரு கையளவு வெல்லம் / நாட்டு சர்க்கரை தண்ணீர் 200 லிட்டர் தேவை.

முதலில் நாட்டுப்பசுஞ் சாணம் மற்றும் நாட்டுப் பசு கோமியம் (பசுஞ்சாணம் புதியதாக இருத்தல் அவசியம், கோமியம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) ஆகியவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொண்டு, அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இப்பொழுது அமிர்த கரைசல் தயார்.

ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் மற்றும் சொட்டு நீரிலும் கலந்து விடலாம். பயிர்கள் நோய் நொடி இல்லாமல் வளர இது உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்” என்றனர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/160446--4.html ↗

Improved Amirtha Karaisal

மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்

வேளாண்மையில் பாக்டீரியாவின் பங்கு இன்றியமையாதது. அதை மண்ணுக்கு அளிக்கும் தன்மையுடையது ‘மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்’. ஒரு ஏக்கருக்கு 30 கிலோ சாணம் (நாட்டு மாடு / எருமையுடையது), 10 லிட்டர் கோமயம், 2 கிலோ கடலைப் புண்ணாக்கு, 10 வாழைப்பழம், 2 கிலோ வெல்லம், 1 பெரிய மஞ்சள் பூசணி, ¼ லிட்டர் தயிர். இவற்றை எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கூழ் போல் கலக்கி, அதில் 50 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 நாட்களுக்கு ஊறவைக்க வேண்டும். தினமும் ஒரு முறை நன்கு கலக்கிவிட வேண்டும். ஆறாவது நாள் முதல் இதைத் தேவைக்கேற்ப எடுத்து வயலில் பயன்படுத்தலாம். இதனால் நெற்கதிர்களில் தானியம் நன்கு பிடிக்கும்.

Fish Acid

மீன் அமிலம்

ஒரு ஏக்கருக்கு 10 கிலோ நாட்டு மீன் குடல், 13 கிலோ வெல்லம், 5 வாழை பழம், ¼ லிட்டர் தயிர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் வெல்லம், அடுத்து மீன், பிறகு வாழையும் தயிரும் எனச் சேர்த்து வைக்க வேண்டும். இவை உண்ணக்கூடிய பொருட்கள் என்பதால் நாய், எலி, எறும்புகள் அணுகாத வகையில் பாதுகாப்பாக வைக்கவேண்டும். “சில நாட்களுக்கு பின் தேன் போல் காட்சியளிக்கும் மீன் அமிலம் கிடைக்கும். இதை வயலில் பயன்படுத்தினால் பயிர் அமோகமாக வளரும். இந்த மீன் அமிலம் பயிருக்கு வறட்சியைத் தாங்ககூடிய ஆற்றலை அளிப்பதுடன், பயிர் விளைச்சலையும் ருசியானதாக மாற்றும்”, என்கிறார் ஸ்ரீதர்.விவசாயி ஸ்ரீதர் தொடர்புக்கு: 09092779779

Source: https://gttaagri.relier.in/ ↗

Camphor Karaisal or solution

கற்பூரக் கரைசல்

  1. 100 மிலி வேப்பெண்ணைய்

2.பசு மாட்டு கோமியம். புதியதாக இருந்தால் 1 லிட்டர், பழைய கோமியமாக இருந்தால் 1/2 (அரை) லிட்டர்.

3.பயிறுனுடைய வயதிற்கேற்ப கற்பூர வில்லைகள். உளுந்து போன்ற சிறிய இலைகள் உள்ள பயிர்களுக்கு, பயிர் ஒரு மாதத்திற்கு குறைவான வயதிருந்தால் 5 வில்லைகள்.ஒரு மாதத்திற்கு மேலான பயிர்களுக்கு 8 வில்லைகள் வரை குடுக்கலாம்.

  1. கத்தரி, வெண்டை போன்ற பெரிய பயிர் செடிகளுக்கு வெயில் காலங்களில் 8 வில்லைகள்

கொடுக்கலாம்.வெயில் குறைவான காலங்களில் 10 வில்லைகள் வரை கொடுக்கலாம்.

செய்முறை:

கற்பூரம் தண்ணீரில் கரையாது, கரும்பு ஆலைகளில் இருந்து கழிவாக கிடைக்கும் எத்தனால் கற்பூரத்தை கரைக்கும். எத்தனால் இயற்கையான ஒன்று அதனால் இதை உபயோகிக்கலாம்.

நீலகிரி தைலம் (யூகலிப்டஸ் ஆயில்) கற்பூரத்தை கரைக்கும் தன்மை கொண்டது.இதனையும் உபயோகிக்கலாம்.சர்ஜிக்கல் ஸ்பிரிட் கற்பூரத்தை கரைக்கும். அனால் இது கெமிக்கல் கலந்து தயாரிக்கப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இயற்கை ஷாம்புக்களை உபயோகிக்கலாம். சீக்காய் அல்லது சோப்பு காய் என்று சொல்வார்கள் (நகை பாலீஸ் செய்பவர்கள் இந்த கொட்டையை பவுடராக உபயோகிப்பார்கள்) இதனை வேப்பெண்ணையுடன் கலப்பதால் வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்ற முடியும்.சோப்பு ஆயில் மற்றும் காதி சோப்பு உபயோகிக்கலாம்.

வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்றிய பிறகு, இந்த கரைசலுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1.5 ஸ்பூன் கிளிஞ்சல் சுண்ணாம்பு கலந்து கொள்ளவும். இதனால் நாட்பட்ட பூச்சி தாக்குதல்களையும் கட்டுப்படுத்தலாம்.

ஸ்பிரேயரில் பாதி அளவு தண்ணீரை நிரப்பி பின்பு கரைத்து வைத்துள்ள கற்பூர கரைசல் மற்றும் வேப்பெண்ணை கரைசலை கலந்து கொள்ளவும். பிறகு இஸ்பிரேயரில் கீதமுள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்பொழுது அணைத்து கரைசல்களும் தண்ணீருடன் நன்றாக கலந்துவிடும். இதனை செடிகளுக்கு அடிக்கலாம். Source: https://tamil.asianetnews.com/agriculture/method-of-making-camphor-solution-and-its-benefits ↗

Fertilizer used in natrangal

Phospbacteria 500ml


© Prabu Anand K 2020-2026